கோடைக்காலம் முடிவு... இன்று முதல் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு...! - தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்
Summer is over Chance of rain TN from today Private Meteorologist Pradeep John
''பிரதீப் ஜான்'' என்னும் தனியார் வானிலை ஆய்வாளர் தனது சமூக வலைதளத்தில் வானிலை குறித்து பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.அதில் அவர் குறிப்பிட்டதவது,"கோடைக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் இன்று முதல் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டிற்கு மிகவும் தனித்துவமான ஆண்டுகளில் ஒன்று.

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வெப்ப அலை இருக்காது.மேலும் கடந்த 25 ஆண்டுகளில் 2022, 2018 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளிளை தொடர்ந்து இந்த மே மாதத்தில் சென்னை 40 செல்சியஸை ஒரு நாள் கூட தாண்டவில்லை.கிழக்கு மேற்கு வளி மண்டலத்தின் ஒரு பகுதியாக இந்த பரந்த சுழற்சி இம்மாத இறுதியில் அல்லது ஜூன் 1 ஆம் வாரத்தில் உருவாகிறது.
இப்போது முதல் முறையாக மே மாத நடுப்பகுதியில் நான் இதைக் காண்கிறேன். பொதுவாக, இந்த வளிமண்டலம் முடிவடையும்போது குறைந்த காற்றழுத்ததை ஏற்படுத்தும். எனவே அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா இரண்டிலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (மாத இறுதியில்) இருக்கும்.
அரபிக் கடலில் ஒன்று அடுத்த 10 நாட்களில் ஒரு சூறாவளி புயலாக உருவாக வாய்ப்புள்ளது.அதன்படி, ஞாயிற்றுக்கிழமை இந்த சுழற்சி இன்னும் நெருக்கமாகி, கிழக்கு திசையில் இருந்து தமிழக வடக்கு கடலோரம் மற்றும் கடற்கரைகளில் வீசும். இதனால் வரும் நாட்களில் மிகவும் மழை பெய்யும். இன்றும் மழைக்கான வாய்ப்புள்ளது.
கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், காஞ்சிபுரம், சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், பாண்டி, விழுப்புரம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காரைக்காலின் டெல்டா பகுதிகள், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி, தர்மபுரி, ஈரோடு போன்ற இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பெங்களூருவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.இனிமேல் கோடை இல்லாத மாதத்தை அனுபவியுங்கள். அதாவது 10 செல்சியஸ் வெப்பநிலையில் நடுங்கும் என்று அர்த்தமல்ல. மே மாத காலநிலையைக் கருத்தில் கொண்டு இது இயல்பை விட குறைவாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.மேலும் இதுகுறித்து இனி வரும் நாள்களில் விவசாயிகள் மழையை நம்பி பயிரிடலாம் என்று தெரிவித்துள்ளன.
English Summary
Summer is over Chance of rain TN from today Private Meteorologist Pradeep John