சென்னைக்கு குளுகுளு செய்தி சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்!
Summer heat TN Weather man chennai
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் நிலவிய நிலையில், கடன் சில நாட்களாக கோடை மழையும் பெய்து வருகிறது.
கடந்த 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் 'கத்திரி' வெயில் தொடங்கியது. பொதுவாக இந்த காலத்தில் அதிக வெப்பம் நிலவுவது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டில் வினோதமாகவே அக்னி நட்சத்திரத்தின் ஆரம்ப நாளிலிருந்தே பல மாவட்டங்களில் மழை கொட்டியது. அதே சமயத்தில் வெயிலின் தாக்கம் ஒருசில நகரங்களிலும் மட்டும் அதிகம் காணப்பட்டது.
இதுகுறித்து வானிலை துறையினர் கூறுகையில், அக்னி நட்சத்திரம் தொடரும் நாட்களிலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு நிலவும் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்ட தகவலின்படி, கடல் காற்று வீசுவதால் வெப்பம் குறையும். அதனால் சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் குளிர்ச்சியான நிலை காணப்படும்.
சென்னை தவிர, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று மழை பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
English Summary
Summer heat TN Weather man chennai