அச்சச்சோ!!! ஓமன் நாட்டில் வாழ்ந்த இந்திய தம்பதிகளுக்கு நடந்த விபரீதம் என்ன...?
Indian couple living in Oman died accident
கேரளா கண்ணூர் மாவட்டம் தலச்சேரி பகுதியை சேர்ந்தவர் 59 வயதான பங்கஜாக்சன் என்பவர் . இவரது மனைவி 53 வயதான சஜிதா என்பவர். இந்த தம்பதி இருவரும் பல ஆண்டுகளாக ஓமன் நாட்டில் வாழ்ந்து வந்தனர்.

அவர்கள் 'மஸ்கட் கவர்னரேட்' பகுதியில் செயல்படும் ஒரு ஓட்டலில் மாடியிலிருக்கும் அறையில் வசித்து வந்தனர்.இந்நிலையில் அதிகாலையில், அந்த ஓட்டலில் 'சமையல் கியாஸ் சிலிண்டர்' வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
இதனால் அதிர்வு தாங்காமல், அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.இந்த எதிர்பாராத விபத்தில் பங்கஜாக்சன் மற்றும் சஜிதா ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த சென்னையில் வசித்துவரும் அவரது மகள், ஓமன் நாட்டிற்கு விரைந்துள்ளார்.மேலும் இதுகுறித்த விசாரணையை ஓமன் நாட்டு காவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Indian couple living in Oman died accident