தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம்.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.!!
Southwest Monsoon Starting Day Change
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தென் மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களில் அதிக மழைப் பொழிவு ஏற்படும். அந்தமான் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படும்போது இந்திய வானிலை ஆய்வு மையம் இதனை கணித்து தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதியை அறிவிக்கும்.
ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அந்தமான் தீவுகளில் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே தெரிந்துள்ளது. இதனால், வருகின்ற 23-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என கூறப்பட்டது.
இந்நிலையில், பருவமழையின் வருகையை அறிவிக்கும் அறிகுறிகளும் தென்படவில்லை என்பதால் வருகின்ற 30ஆம் தேதிக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இல்லை என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Southwest Monsoon Starting Day Change