'தென்மேற்கு பருவக்காற்று... வீசும் போது சாரல்... இன்பச்சாரல்'...! - தென்மேற்கு பருவமழை மே மாதத்திலேயே தொடங்கி விட்டது...!
southwest monsoon has already started in May
இந்திய வானிலை ஆய்வு மையம், 'இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறது' என்று தெரிவித்துள்ளது.

மேலும் இந்திய வானிலை ஆய்வு மையம், 'இந்தாண்டு 10 நாட்களுக்கு முன்னதாகவே வருகிற 13-ந்தேதி, தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் உள்ளது.
இதனால் ஜூன் மாதத்திற்கு பதிலாக மே மாதமே தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்களா விரிகுடா, நிக்கோபார் தீவுகளின் சில பகுதிகளில் வருகிற 13-ந்தேதி தென்மேற்கு பருவமழை உருவாக வாய்ப்பு உள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் அதற்கு ஏற்றவாறு தங்களை தயார்படுத்திக்க வலியுறுத்துகிறது.ஏனென்றால்,பருவமழை காரணமாக பலத்த காற்று வீசக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
English Summary
southwest monsoon has already started in May