3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் - டி.என்.பி.எஸ்.சி தலைவர் தகவல்.!!
group 4 result release within three months tnpsc leader info
டி.என்.பி.எஸ்.சி. தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. அந்த வகையில் குரூப்-4 பணிகளில் காலியாகவுள்ள 3,935 இடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு சமீபத்தில் ஹால்டிக்கெட்டையும் வெளியிட்டது.
அதன்படி, இன்று குரூப் 4 தேர்வை தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 314 மையங்களில் 13,89,738 பேர் எழுதி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள தேர்வு மையத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் தெரிவித்ததாவது:-
"குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும். வரும் நாட்களில் 10,000 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும். குரூப் 4 தேர்வு வினாத்தாள் எதுவும் கசியவில்லை. குரூப் 4 தேர்வு வினாத்தாள், விடைத்தாள் அனைத்து பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளன" என்றுத் தெரிவித்தார் .
English Summary
group 4 result release within three months tnpsc leader info