விசா கட்டணம் - இந்தியர்களுக்கு ஷாக் கொடுத்த அமெரிக்க! - Seithipunal
Seithipunal


குடியேற்றம் அல்லாத விசாக்களுக்கு புதிய கட்டணத்தை  டிரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளார்.ரூ.16,000-இல் இருந்து ரூ.40,000 ஆக  விசா கட்டணம்  அதிகரிக்கப்பட்டுள்ளதால் இந்தியர்கள்  ஷாக் அடைந்துள்ளனர். 

இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்று கொண்டார். அவர் பதவியேற்று முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டார். அத்துடன் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு வர்த்தக ரீதியிலான வரி விதிப்பை அதிகப்படுத்தி அதிர்ச்சி அடை செய்தார். இதனால் இந்த வரி விதிப்பால் உலக நாடுகள் அதிருப்திய அடைந்தனர்.

இதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொண்டு வந்த 'பிக் பியூட்டிஃபுல் பில்' மசோதா கடந்த ஜூலை 4 அன்று சட்டானது.இந்த சட்டத்தின்கீழ் குடியேற்றம் அல்லாத விசாக்களுக்கு 250 டாலர்புதிய விசா கட்டணத்தை (Visa Integrity Fee) டிரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளார்.

 இது 2026 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும்.இந்தக் கட்டணம் B-1/B-2 , F மற்றும் M , H-1B  மற்றும் J ஆகியவற்றுக்கு பொருந்தும். A மற்றும் G பிரிவுகளில் உள்ள விசாக்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.எனவே இந்தியர்கள் உட்பட அமெரிக்காவுக்குச் செல்லும் மாணவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகப் பயணிகள் அனைவரும் இந்தக் கூடுதல் கட்டணத்தால் பாதிக்கப்படுவார்கள்.

தற்போது, அமெரிக்க B-1/B-2 விசாவுக்கு சுமார் ரூ. 15,800செலவாகிறது. புதிய கட்டணம் அமலுக்கு வந்தால் மற்ற செலவுகளுடன் சேர்ந்து மொத்த செலவு சுமார்ரூ. 40,502 ஆக உயரும். இது தற்போதைய விசா செலவை விட 2.5 மடங்கு அதிகம்.இதனால் இந்திய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Visa fee America shocked Indians


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->