எடுத்தேன் பாரு ஓட்டம்!!! கிடைத்த gap- ல் escape - ஆன போக்சோ சிறை கைதி! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தஞ்சை கும்பகோணம் மருதாநல்லூரை சேர்ந்த ஜெயராமனுடைய மகன் 47 வயதான ராஜேந்திரன் என்பவர்,கடந்த 2022-ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் காவலர்களால் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் ராஜேந்திரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து அவரை 2023-ம் ஆண்டு முதல் திருச்சி மத்திய சிறையில் அடைத்து இருந்தனர். இதில் வழக்கமாக ஆயுள் தண்டனை கைதிகளை சிறைச்சாலையில் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்துவார்கள். அவ்வகையில் நேற்று அதிகாலை 5.50 மணி அளவில் ராஜேந்திரன் உள்பட 5 கைதிகளை மத்திய சிறையிலிருந்து வெளியே அழைத்து வந்து சிறைச்சாலையின் நுழைவு வாயில் முன்புள்ள கேண்டீனில் வேலைக்கு அனுப்பினர்.

அங்கு ராஜேந்திரன் சமையல் உதவியாளராக பணி செய்து வந்தார்.இதைத்தொடர்ந்து காலை 8.30 மணி அளவில் வேலைக்கு சென்ற கைதிகளின் விவரத்தை கணக்கெடுத்தபோது, ராஜேந்திரன் மட்டும் அங்கு இல்லாதது தெரிய வந்தது.அவர் யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து தப்பி ஓடிய உடனே சிறையை சுற்றியுள்ள பகுதிகளில் அவரை தேடிப்பார்த்தனர்.

ஆனால் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதையடுத்து சிறை நிர்வாகம் தரப்பில் கே.கே.நகர் காவலில் புகார் அளிக்கப்பட்டது.அதன்பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கைதி ராஜேந்திரனை தஞ்சையிலுள்ள அவரது வீடு மற்றும் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தீவிரமாக தேடி வருகிறார்கள். திருச்சி மத்திய சிறையிலிருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

POCSO prisoner escaped through gap he found What happened


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->