தென் சென்னை மக்களே உஷார்! எச்சரிக்கை விடுக்கும் தமிழ்நாடு வெதர்மேன்! - Seithipunal
Seithipunal


கடந்த மூன்று நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை பொருத்தவரை நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வரும் இந்த நிலையில் தற்பொழுது மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்பொழுது சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. 

கடந்த 36 மணி நேரம் பொறுத்தவரை வடசென்னை பகுதியில் அதிகப்படியான மழை பொழிவு பதிவாகியுள்ளது. கடந்த 36 மணி நேரத்தில் திருவிக நகரில் 346 மி.மீ, திருவெற்றியூர் 324 மி.மீ, கத்திவாக்கம் 317 மி.மீ, மணலி பகுதியில் 314 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த மழைப்பொழிவானது கடந்த 2014 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் இதே காலகட்டத்தில் பெய்த சராசரி மழை அளவைவிட அதிகமாக உள்ளது. இந்த நிலையில் இன்று தென்கிழக்கு பகுதியில் இருந்து மேகக் கூட்டங்கள் நகர்வதால் வடசென்னை பகுதியில் லேசான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு பகுதியான அரபிக் கடலை நோக்கி நகர்வதால் புதுச்சேரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்யக்கூடும். இதன் காரணமாக தென் சென்னை பகுதியில் மேகக் கூட்டங்கள் நகர்வதால் பரவலாக மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நேற்றைய மழையைப் போன்று அதிக அளவில் இருக்காது என நம்பப்படுகிறது. இது குறித்தான தகவலை பிரதீப் ஜான் எனும் தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

South Chennai people beware Tamil Nadu weatherman to warn


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->