கேரளாவில் மழைக்கு எச்சரிக்கை! 5 நாட்களுக்கு மஞ்சள்,ஆரஞ்சு அலர்ட்!
Rain warning in Kerala Yellow orange alert for 5 days
இந்திய வானிலை ஆய்வு மையம் ,கேரள மாநிலம் முழுவதும் மேற்கு பசிபிக் பெருங்கடலில் உருவான வெப்பமண்டல புயல் விபா காரணமாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும்,பலவீனமடைந்துள்ள சூறாவளி புயல் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வங்காள விரிகுடாவில் நுழையும் என்பதனால் அடுத்த 5 தினங்களுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பத்தனம்திட்டா, கோழிக்கோடு, வயநாடு,கோட்டயம், இடுக்கி, ஆலப்புழா, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் 64.5 முதல் 115.5 மி.மீ வரை மழை பெய்யும் என்பதால் இந்த 8 மாவட்டங்களுக்கும் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக கோட்டயம், எர்ணாகுளம்,பத்தனம்திட்டா, இடுக்கி மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த காலத்தில் மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Rain warning in Kerala Yellow orange alert for 5 days