கன மழை எதிரொலி 2 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு பருவமழை தீவிரவா அடைந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தற்பொழுது இலங்கையின் கடற்பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்று அடித்த தாழ்வு பகுதியானது வலு பெற்று தமிழக மற்றும் புதுவை கடற்கரையை நோக்கி நகர தொடங்கியுள்ளதால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை பல்வேறு மாவட்டங்களில் இன்று ஒரு நாள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு இரண்டு நாட்கள் அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக புதுச்சேரி அரசின் பள்ளிக்கல்வி இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் மாண்புமிகு கல்வி அமைச்சரின் அறிவுறுத்தலின்படி 11/11/2022 மற்றும் 12/11/2022 ஆகிய 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது" என கல்வி இயக்குனர் சிவகாமி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry govt announced 2 days leave for schools and colleges


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->