தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு! 26-28 தேதிகளில் புயல் அபாயம் - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தாக்கம் செலுத்துகிறது. இன்று தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த குறைந்த அழுத்த மண்டலம் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, 26-ந் தேதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக, 27-28-ந் தேதிகளில் மத்திய மேற்கு வங்கக் கடலில் புயலாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது.

இதன் தாக்கத்தால் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 26-28-ந்தேதிகளில் இடை இடையே கனமழை, சில இடங்களில் மிக கனமழையும் பெய்யும் வாய்ப்பு உள்ளது.மேலும் புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால் மாவட்டங்களிலும் நாளை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New depression southeast Bay of Bengal Cyclone threat on 26 28


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->