வானிலை ஆய்வு மையம் அதிரடி எச்சரிக்கை: இன்று தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மிக கனமழையும்...9 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு...!
Meteorological Department issues warning Very heavy rain 17 districts of Tamil Nadu today heavy rain likely 9 districts
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, இன்று 17 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழகக் கடலோரப் பகுதிகளை ஒட்டிய கடற்பரப்பில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாகத் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வங்கக்கடலில் நிலவும் வானிலை மாற்றத்தால் கடல் சீற்றத்துடன் காணப்பட வாய்ப்புள்ளது. எனவே, மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழையின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்பதால், இன்று தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, தென்காசி, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், மதுரை, கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 17 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதவிர, கடலூர், விழுப்புரம்,திருச்சி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், திருப்பூர், கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சில இடங்களில் மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்பதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வானிலை நிலவரத்தைக் கவனித்து, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Meteorological Department issues warning Very heavy rain 17 districts of Tamil Nadu today heavy rain likely 9 districts