கனமழை எதிரொலி: தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு...!
Heavy rains Holiday declared schools 5 districts Tamil Nadu today
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று (அக்டோபர் 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தென் மாவட்டங்கள் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த வானிலை மாற்றத்தின் காரணமாகத் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் தாக்கத்தால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 17 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், திருச்சி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாமக்கல், விழுப்புரம், திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.தென் மாவட்டங்களில் பல இடங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்து வருகிறது.
இதையடுத்து, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.இதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மழையின் தீவிரம் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, கன்னியாகுமரி மற்றும் கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள நெய்யாற்றின்கரை – பாறசாலை இடையிலான ரயில் பாதையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்களின் இயக்கம் பாதிக்கப்பட்டு, ரயில்கள் தாமதமாகச் சென்று வருகின்றன. தொடர் மழையால் ஏற்பட்டுள்ள இந்தப் பாதிப்பு பயணிகளிடையே சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Heavy rains Holiday declared schools 5 districts Tamil Nadu today