கோவையில் நெஞ்சை உலுக்கும் சோகம்...! சக மாணவர்களின் கேலியால் பள்ளியில் இருந்து பாதியில் திரும்பிய பிளஸ் 1 மாணவன் விபரீத முடிவு...! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் பீளமேடு ஏ.டி. காலனியைச் சேர்ந்த அசோக்குமார் (45), கேரள மாநிலம் மூணாறில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவுசல்யா தேவி (40). இவர்களது மகன் அகிலன் (16), பீளமேட்டில் உள்ள ஒரு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

ஆயுதபூஜை விடுமுறை முடிந்து நேற்று காலை அகிலன் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுள்ளார். பள்ளி தொடங்குவதற்கு முன்பு நடைபெற்ற காலை இறைவணக்கக் கூட்டத்தின்போது, சக மாணவர்கள் சிலர் அவரைச் சாதிப் பெயரைக் குறிப்பிட்டுக் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அகிலன், பள்ளியிலிருந்து பாதியிலேயே வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

அப்போது அவரது பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றிருந்ததால், வீட்டில் அகிலன் தனியாக இருந்துள்ளார். சக மாணவர்களின் கேலி காரணமாக அவர் மனவேதனையில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், வீட்டில் அவர் உயிரை மாய்த்துக்கொண்டார்.இதுகுறித்துத் தகவல் அறிந்த பீளமேடு காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மாணவரின் உயிரிழப்பு தொடர்பாக அவரது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விவரங்களைக் கேட்டறிந்தனர்.மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவலர்கள், மாணவர் உயிரிழந்ததற்கான காரணம் மற்றும் பள்ளியில் நடந்ததாகக் கூறப்படும் கேலி சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heartbreaking tragedy Coimbatore Plus 1 student who returned halfway from school due mockery his fellow students tragic end


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->