தமிழ்நாட்டை நெருங்கும் தாழ்வு மண்டலம்..? டெல்டா விவசாயிகள் தானியங்களை பத்திரப்படுத்துமாறு வேண்டுகோள்..!
Low pressure system approaching Tamil Nadu
தென்மேற்கு வங்கக்கட பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி தெற்கு இலங்கையில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டிற்கு நேரடியாக எந் பாதிப்பும் இருக்காது என்று கூறப்பட்டது.
இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு தெற்கு இலங்கையில் கரையை கடக்கும் என சொல்லப்பட்ட நிலையில், தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் பயணித்து, வட இலங்கை- டெல்டா கடற்பகுதி நோக்கி அடுத்த 36 மணி நேரத்தில் நகரும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
இந்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக உருவாக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. அத்துடன், ஜனவரி 09 முதல் 12 வரை விவசாயிகள் வேளாண் பணிகளை ஒத்திவைத்து, தானியங்களை பத்திரப்படுத்துமாறு டெல்டா விவசாயிகளுக்கு ஹேமச்சந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
English Summary
Low pressure system approaching Tamil Nadu