ஐந்து இடங்களில் சதமடித்த வெயில்! மக்கள் பெரும் அவதி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்று 5 இடங்களில் வெயில் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து கொளுத்தியது.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் வெய்யில் வாட்டி வதைக்கிறது. இன்று ஐந்து இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெய்யில் கொளுத்தியது. ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், மதுரை நகரம், சேலம் ஆகிய 5 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவைக் வெய்யில் கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிபட்சமாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 103.1 டிகிரி பாரன்ஹீட்டும், மதுரை விமான நிலையத்தில் 101.66 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியிருந்தது. மதுரை நகரில் 101.48 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், ஈரோடு, சேலத்தில் தலா 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hundred degree Fahrenheat


கருத்துக் கணிப்பு

முதலமைச்சருடைய சிங்கப்பூர், ஜப்பான் பயணம் தோல்வி என எடப்பாடி பழனிசாமி கூறுவது?Advertisement

கருத்துக் கணிப்பு

முதலமைச்சருடைய சிங்கப்பூர், ஜப்பான் பயணம் தோல்வி என எடப்பாடி பழனிசாமி கூறுவது?
Seithipunal