வெளுக்க போகுது.. தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்காலுக்கு ஆரஞ்சு அலர்ட்.! வாகன ஓட்டிகளே அலர்ட்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வழக்கமாக மே மாதம் தொடங்கும் கோடை வெயிலானது இந்த வருடம் பிப்ரவரி மாதமே தொடங்கிவிட்டது. 

கடும் வெயில் தாக்கத்தின் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இதற்கிடையே தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

இந்த கன மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும், சில இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சாலையின் கட்டுமானத்தில் சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சாலைகளில் மழைநீர் தேங்குவதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

எனவே மேற்கண்ட மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வெளியே செல்லும்போது மிகுந்த கவனத்துடன் செல்லவும், பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heavy rain orange alert for Tamilnadu Puducherry Karaikal


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->