மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள்! அரியலூா் மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை!
Ariyalur Local Holyday rajendra chola birth day
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பெருவுடையார் கோயிலில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவை முன்னிட்டு, ஜூலை 23ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர்விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை, தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும்.
இருப்பினும், இந்த விடுமுறை நாள், அரசு பள்ளித்தேர்வுத் துறை நடத்தும் மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ-இந்தியன் பள்ளி இறுதி தேர்வுகளுக்கு பொருந்தாது. அந்த தேர்வுகள் முந்தைய அறிவிப்புப்படி அன்றைய தினத்தில் தான் நடைபெறும்.
மேலும், ஜூலை 23ஆம் தேதி, மாவட்ட மற்றும் சார்நிலை கருவூலங்கள் அவசர தேவைகளுக்காக குறைந்தபட்ச ஊழியர்களுடன் செயல்படும்.
இவ்வாறு அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஜூலை 26ஆம் தேதி முழு வேலை நாளாக அறிவிக்கப்படுவதாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
English Summary
Ariyalur Local Holyday rajendra chola birth day