முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து!
CM Stalin all program cancel MK Muthu death
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சகோதரருமான மு.க. முத்து (77) வயது மூப்பால் இன்று காலமானார்.
அவரது மறைவையடுத்து, முதல்வர் பங்கேற்கவிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அரசுத் தகவல் வெளியீடு தெரிவிக்கிறது.
மு.க. முத்துவின் உடல் தற்போது சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு அவரின் இறுதி ஊர்வலம் நடைபெறும். பின்னர், சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.
முக முத்து, கருணாநிதி – பத்மாவதி தம்பதியரின் மகனாக பிறந்தவர். தமிழ் திரையுலகில் நடிகராகவும் பாடகராகவும் தனது இடத்தைப் பிடித்தவர். அவர் நடித்த ‘அணையா விளக்கு’, ‘பூக்காரி’, ‘பிள்ளையோ பிள்ளை’ உள்ளிட்ட திரைப்படங்கள் முன்னணி தமிழ் படங்களாக இருந்தன.
English Summary
CM Stalin all program cancel MK Muthu death