ஹரியானா, உத்திரப் பிரதேசத்தில் தொடரும் கனமழை! ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுரை.! - Seithipunal
Seithipunal


ஹரியானா, உத்திரப் பிரதேசத்தில் தொடரும் கனமழை காரணமாக ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லி, ஹரியானா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் நேற்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் புயல் காற்றுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணத்தினால் போக்குவரத்து கடுமையாக பாதித்துள்ளது.

இந்நிலையில் இரு மாநில அரசுகளும், தனியார் மற்றும் அரசு ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்தியுள்ளது.

மேலும் சண்டிகர் வானிலை மையம், உத்திரபிரதேசம், ஹரியானா மற்றும் குருகிராமில் இன்னும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என அறிவித்துள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே இருக்கும்படி அந்தந்த மாநில அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain in uttarpradesh Hariyana states


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->