தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
feb 26 rain in tamilnadu
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானமழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். 27.2.2021 முதல் 01.3.2021 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.