திடீரென சென்னையில் கனமழை.. திக்குமுக்காடும் சென்னைவாசிகள்.!! 
                                    
                                    
                                   feb 20 heavy rain in chennai
 
                                 
                               
                                
                                      
                                            வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 
21.2.2021 மற்றும் 22.2.2021 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுய் மையம் தெரிவித்துள்ளது.அதன்படி, சென்னையில் நேற்று காலை ஒரு சில இடங்களில் மிதமான சாரல் மழை பெய்தது. கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், வேப்பேரி, புரசைவாக்கம், திருவொற்றியூர் உள்ளிட்ட சில இடங்களில் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. 

இந்நிலையில், இன்று அதிகாலை முதலே சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. வடபழனி, முகப்பேர், கிண்டி, மதுரவாயல், ஆலப்பாக்கம், விருகம்பாக்கம், போரூர், அசோக் நகர், கோயம்பேடு, கோடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. 
சென்னையை தவிர்த்து செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கன மழையால் சென்னையில் குளிர்ந்த காற்றும். இதமான சூழலும் நிலவுகிறது. திடீரென பெய்து வரும் கனமழையால் அலுவலகம் செல்லும் ஊழியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
                                     
                                 
                   
                       English Summary
                       feb 20 heavy rain in chennai