அரபிக் கடலில் "பைபர் ஜாய்" புயல் உருவானது.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு அரபிக் கடலில் நேற்று மாலை உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதை அடுத்து 24 மணி நேரத்திற்குள் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இந்தப் புயல் ஆனது தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் வலுபெறக்கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புயலுக்கு பைபர் ஜாய் என பயிரிடப்பட்ட நிலையில் அரபிக் கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்புமாறுவானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருந்தது. வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி தற்பொழுது தென்கிழக்கு அரபிக் கடலில் பைபர் ஜாய் புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தப் புயல் அடுத்த 24 மணி நேரத்திற்கு வடக்கு திசையை நோக்கி நகர்ந்து மத்திய அரபிக் கடல் பகுதியில் அதிதீவிர புயலாக உருமாற கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cyclone "Piper Joy" formed in Arabian sea


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->