நாளை கத்தரி வெயில் தொடக்கம்; 04 முதல் 09ஆம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


நாளை முதல் (04ஆம் தேதி) கத்திரி வெயில் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே, தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று வேலூரில் அதிகபட்சமாக 41.8° செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ள நிலையில், குறைந்தபட்சமாக மதுரை விமான நிலையம் பகுதியில் 21.1° செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. அடுத்து, கொடைக்கானலில் 9.7° செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

தெற்கு சத்தீஸ்கர் முதல் குமரிக்கடல் வரை தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

04-ஆம் தேதி

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, கரூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

05-ஆம் தேதி 

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

06-ஆம் தேதி 

நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

07-ஆம் தேதி

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

08-ஆம் தேதி 

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்யக்கூடும்.

09-ஆம் தேதி 

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chance of heavy rainfall in Tamil Nadu from the 4th to the 9th


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->