#Viral_Video || "உங்கள நம்பி தானே ஓட்டு போட்டோம்".. ஸ்டாலினை அதிர விட்ட பெண்.!! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் என்று ஈரோடு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளருக்காக வீதிகளில் இறங்கி நடை பயிற்சி மேற்கொள்ளும் போது வாக்கு சேகரிப்பல் ஈடுபட்டார். 

அந்த வகையில் ஈரோடு தொகுதிக்கு உட்பட்ட சம்பத் நகரில் உள்ள உழவர் சந்தைக்குச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மு.க ஸ்டாலினிடம் பெண் ஒருவர் தனக்கு ஏன் ரூ.1,000 உரிமை தொகை வழங்கவில்லை என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் "எனக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை இல்லை என சொல்லிட்டாங்க.. இரண்டாவது முறையும் மேல்முறையீடு செஞ்சேன்... அப்பயும் இல்லன்னு சொல்லிட்டாங்க.. உங்க வாக்குறுதி நம்பி தானே ஓடு போட்டோம்.. இதோ இங்க கீழ உட்கார்ந்து தான் வியாபாரம் பண்றேன்... என தனது ஆதங்கத்தை கொட்ட .. அதற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஏதாவது காரணம் இருக்கும் அதனால் தான் கொடுத்திருக்க மாட்டாங்க என பதிலளித்தார். 

அதற்கு அந்தப் பெண் எங்க வீட்டில் அரசு ஊழியர் இருக்கிறார்.. என கூற அதனால்தான் ஆயிரம் ரூபாய் கொடுத்து இருக்க மாட்டாங்க என முதலமைச்சர் சொல்ல "அவங்க சாப்பிட்டா அவங்க வயிறு நிரம்பும்.. எனக்கு வேணாமா? என சரமாரியாக கேள்வி எழுப்பும்போதே முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அங்கிருந்து நழுவி சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக முழுவதும் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலின் போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்த நிலையில் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே தற்போது உரிமை தொகை வழங்கப்படுகிறது என்பதை குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman asked MKStalin why not give rs1000


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->