முடிவுக்கு வந்தது ஆபாசம், கிளுகிளுப்பு, ஆட்டம், பாட்டம்.!! கூகுள் அதிரடி.!! மொத்த இந்தியர்களுக்கும் ஆப்பு.!!! - Seithipunal
Seithipunal


ஒரு தலைமுறையையே தவறான பாதைக்கு வழி வகுத்த டிக் டாக் செயலியை கூகுள் நிறுவனம் இந்தியாவில் தடை செய்துள்ளது. இது அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மாராப்பு விலகினால், அம்மா சரி செய்து கொள்ளடா என்று சொல்லும் தமிழ் சமுதாயத்தில், மாராப்பை விளக்கியும், தொப்புள் தெரியும் படியும், இச்சை உணர்ச்சிகளை தூண்டும் விலை மாதுகளாக குடும்ப பெண்கள் மாறி, டிக் டாக் செயலியில் காணொளிகளை பதிவேற்ற தொடங்க..

மறுபக்கம் கண்ணியம் தவறாமல், ஆணுக்கும் கற்பு உண்டு என்று வாழ்ந்து வந்த தமிழக ஆண்கள் அதனை கண்டு ரசிக்க தொடங்கிவிட்டனர். மேலும் இந்த செயலி காரணமாக பல தற்கொலை சம்பவங்களும் அரங்கேறியது.

படுக்கை அறை காட்சி முதல், ஆபாச வார்த்தைகளுக்கு சைகை காண்பித்தது என்று வரைமுறை இல்லாமல், ஒரு ஆபாச தளமாகவே மாறிய இந்த டிக் டாக் செயலியை பயன்படுத்திய 400-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

இந்நிலையில், இந்த செயலியை தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று மதுரை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ''டிக்-டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். டிக்-டாக் செயலி மூலம் எடுத்த வீடியோக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக்கூடாது என்று உத்தரவிட்டது. இந்த வழக்கு குறித்து மத்திய அரசு பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கின் மறு விசாரணையில், ஆப்பிள் , கூகுள் ஆகிய நிறுவனங்கள் டிக் டாக் செயலியை நீக்கும்படி நீதிபதிகள் எச்சரித்திருந்தனர். இதனையடுத்து கூகுள் நிறுவனம் இந்தியாவில் டிக் டாக் செயலியை பயன்படுத்த முடியாதபடி ப்ளேஸ்டோரில் இருந்து  நீக்கி உள்ளது.

இது மட்டும் போதாது, பலதரப்பட்ட மக்கள் பார்க்கும் ஒரு தொலைக்காட்சியில் நீச்சல் உடையுடன் சொப்பன சுந்தரி நிகழ்ச்சியும், நடிகர் விஜய் பெயரை கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சன்னி க்கு ஆங்கிலத்தில் எழுத்துக்களை வரிசை படுத்தி அதனை நகைச்சுவை என்பதும் போன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tik tok banned


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->