காலையிலேயே.. வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய எடப்பாடி..!! - Seithipunal
Seithipunal


எதிர்வரும் மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று திருச்சியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. 

இதற்கான ஏற்பாடுகளை திருச்சியில் அதிமுகவினர் முழுவீச்சில் செய்து வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 

அந்த வீடியோவில் "அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே உங்கள் எண்ணங்களின் தேவைகளின் பிரதிபலிப்பை அதிமுகவின் தேர்தல் அறிக்கை. வெற்றி திம்பங்களோ விளம்பர நோக்கமோ இன்றி நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மை அறிக்கையை அளித்த பரிமுதத்துடன் இன்று திருச்சியில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உங்களை சந்திக்க வருகிறேன். 

தமிழர் உரிமை மீட்போம்! தமிழ்நாடு காப்போம்! நம் மாநிலத்திற்கு எதிரான சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாக சீர்கேடுகளையும் மாநில உரிமை பறிப்புகளையும் போதைப்பொருள் புழக்கத்தையும் பிரிவினைவாத எண்ணங்களையும் ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் வாக்களிப்பீர் இரட்டை இலைக்கே" கூறி வீடியோ மூலம் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS released AIADMK election campaign video


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?
Seithipunal
--> -->