2025 கவாசகி நின்ஜா 650 பைக்கின் விலையை கேட்டால் ஆச்சரியம் அடைவீர்கள்...!!!
You surprised hear price 2025 Kawasaki Ninja 650 bike
இந்திய சந்தையில், 'கவாசகி' இந்தியா நிறுவனம் மேம்பட்ட 'நின்ஜா 650 ' மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த கவாசகி 2025 நின்ஜா 650 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 7,27,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த புதிய மாடல் அதன் முந்தைய பதிப்பு மாதிரியை விட அதிகளவு மேம்படுத்தப்பட்டு புதிய அம்சங்கள் பல கொண்டுள்ளதால், முந்தைய மாடலை விட இதன் விலை ரூ. 11,000 அதிகரித்துள்ளது.
மேலும், இந்த 2025 நிஞ்ஜா 650 பைக் பச்சை நிறத்தில் வெள்ளை, மஞ்சள் மற்றும் கருப்பு நிற கோடுகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும்,புதிய மாடலிலும் 649சிசி, பேரலெல் ட்வின் லிக்விட்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் சிறப்பம்சமாக, இந்த என்ஜின் 67 ஹெச்பி பவர், 64 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இத்துடன் கூடுதலாக 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.இது பைக் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தியாக கருதப்படுகிறது.
English Summary
You surprised hear price 2025 Kawasaki Ninja 650 bike