இந்த ஐபோன் மாடல்களில் வாட்ஸ்ஆப் இயங்காது - வாட்ஸ்ஆப் நிறுவனம்! - Seithipunal
Seithipunal


தகவல் தொடர்புக்காக உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் சேவை, குறிப்பிட்ட ஐபோன் மாடல்களில் வருகின்ற அக்டோபர் 24-ம் தேதி முதல் நிறுத்தப்படவுள்ளது.

தகவல் தொடர்புக்காக உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும்  அவ்வப்போது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.

வாட்ஸ்ஆப் நிறுவனம், சில பழைய ஐபோன் மாடல்களில் வாட்ஸ்ஆப் விரைவில் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்து வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது,

"ஆப்பிளின் சமீபத்திய அப்டேட்டினால் வருகின்ற அக்டோபர் 24-ம் தேதி முதல் ஐஓஎஸ் 10 மற்றும் ஐஓஎஸ் 11 மென்பொருள் தளங்களில் வாட்ஸ்ஆப் இயங்காது. ஐஓஎஸ் 10 மற்றும் ஐஓஎஸ் 11 ஆகிய மென்பொருள் பதிப்புகள் ஐபோன்களில் பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை.

இருப்பினும், ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5சி ஆகிய மாடல்களில் இந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5சி ஆகிய மாடல்களைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் மென்பொருளை அப்டேட் செய்ய வேண்டும்.

மேலும், ஐபோன் பயனர்கள் ஐஓஎஸ் 12 அல்லது அதற்கு அடுத்த மென்பொருளை அப்டேட் செய்திருக்க வேண்டும். இதனை போன்றே, ஆண்ட்ராய்டு பயனர்கள் ஆண்ட்ராய்டு 4.1 அல்லது அதற்குப் பிந்தைய மென்பொருளை அப்டேட் செய்திருக்க வேண்டும்". என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

whats app new update not support to this version of iphone


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->