வாட்ஸ்-அப் அசத்தலான அப்டேட்.! இனி இப்படியும் 'சென்ட்' பண்ணிக்கலாம்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் அனைவரது ஸ்மார்ட் போன்களிலும் 'வாட்ஸ்அப்' என்ற செயலி நிச்சயம் இடம்பெறும் அளவிற்கு, அதன் பயன்பாடு மிக சிறந்ததாக இருக்கிறது. அண்மையில் பாதுகாப்பு குறித்து பல்வேறு அச்சங்கள் எழுந்தபோது, வாட்ஸ் அப்பை பலரும் அன்இன்ஸ்டால் செய்து வந்தனர்.

ஆனாலும், வாட்ஸ் அப்பை தவிர்க்கமுடியவில்லை. இந்தியாவில் இந்த வாட்ஸ் அப் அனைவரும் பயன்படுத்தும் அளவில் இன்றியமையாததாக மாறியுள்ளது. இளையவர்கள் முதல் முதியவர்கள் வரைஅனைவருக்கும் பயனுள்ளதாக இந்த வாட்ஸப் அமைந்துள்ளது.

சாட் செய்வதற்கும், வீடியோ கால் செய்வதற்கும், புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்வதற்கும் இந்த வாட்ஸ்அப் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், பள்ளி நண்பர்கள் குழு, கல்லூரி நண்பர்கள் குழு, ஆசிரியர்கள் குழு, ஊழியர்கள் குழு, அரசியல் தலைவர்களின் குழு, அரசியல் கட்சிகளின் குழு,  என்று ஏகப்பட்ட குழுக்கள் இந்த வாட்ஸ் அப்பில் இருக்கின்றன.

இந்நிலையில் வாட்ஸ்அப் தனது புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. அதில், பயனாளர்கள் அட்டாச் பைல் (ATTACH FILE) மூலமாக புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அனுப்பும் போது, சென்ட் (sent) பட்டனுக்கு முன்னதாக 'ஒன்று' என வட்டமிடப்பட்ட பட்டன் திரையில் தோன்றும். அதனை தேர்வு செய்து அனுப்பினால், நீங்கள் அனுப்பும் நபர் ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும். இந்த வசதி தற்போது அறிமுக படுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

whats app new update aug


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->