தயிர் சாப்பிட்ட 200 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி: உ.பி.யில் அதிர்ச்சி..! - Seithipunal
Seithipunal


அண்மை காலமாக நாடு முழுவதும் வெறி நாய் கடிப்பதால் ஏற்படக்கூடிய ரேபிஸ் தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுக்கு நாய் வளர்க்கப்பது மற்றும் தெரு நாய்கள் குறித்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  வெறிநாய் கடிக்கு பயந்து தெரு நாய்கள் இருக்கும் பகுதிகள், சாலை போன்றவற்றை பயன்படுத்துவதற்கு கூட பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் புடான் மாவட்டத்தில் உள்ள பிப்ரௌலி கிராமத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது, இறுதிச் சடங்கு ஒன்றில், எருமை மாட்டின் பாலை கொண்டு தயாரிக்கப்பட்ட தயிரில் ரைத்தா செய்யப்பட்டு பரிமாறப்பட்டுள்ளது. இதற்கிடையே மாடு உயிரிழந்தது. அதனை பரிசோதித்த கால்நடை மருத்துவர்கள் வெறிநாய் கடித்ததால் தொற்று ஏற்பட்டு மாடு உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளனர்.

இதன் காரணமாக அந்த உணவை சாப்பிட்ட 200 பேரும் ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் ரேபிஸ் நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

உயிரிழந்த மாடு வெறிநாய் கடித்து தொற்று ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவர, அந்த மாட்டின் பாலில் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்ட கிராம மக்களில் சிலர் தங்களுக்கு ரேபிஸ் தோற்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அங்குள்ள சுகாதார மையத்திற்கு சென்று நடந்ததை கூறி, தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட சுகாதார அமைப்பிற்கு தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, அந்த இறுதி சடங்கில் பங்கேற்ற அனைவருக்கும் தடுப்புழி வழங்க உத்தரவிட்டதாகவும், அதன் பேரில் அக்கிராமத்தில் வசிக்கும் 200க்கும் மேற்பட்டோருக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பாலை சூடு செய்து பயன்படுத்தியிருந்தால் ரேபிஸ் நோய் கிருமிகள் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று தெரிவித்துள்ளனர்.  இதனால், முன்னெச்சரிக்கை தாகவும்,  அந்த கிராமத்தை சேர்த்த மக்களை தொடர்ந்து கண்கணிக்கவும் சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In Uttar Pradesh 200 people who ate curd received rabies vaccinations


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->