மலை மாவட்டங்களில் மழை வருகை…இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் என்னென்ன...?
Rain arrives hilly districts Which districts chance rain until 7 PM tonight
கேரள கடற்கரைப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் வான்பரப்பில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு கடலோர ஆந்திரப் பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சிகளும் ஒன்றிணைந்து வானிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த வானிலைச் சூழலின் எதிரொலியாக, இன்று தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் சில பகுதிகளிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று இரவு 7 மணி வரை தமிழகத்தின் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
மலை மாவட்டங்களில் நிலவும் ஈரப்பதம் காரணமாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Rain arrives hilly districts Which districts chance rain until 7 PM tonight