செவ்வாய் பாறையில் புதைந்த ரகசியம்…! நாசா கண்டுபிடித்த புரட்சிகர ஆதாரம்...! - Seithipunal
Seithipunal


செவ்வாயின் தற்போதைய நிலை உயிர்களுக்கு உகந்ததல்ல. மின்காந்தப்புலம் அழிந்துவிட்டதால், வளிமண்டல அடர்த்தி பூமியை விட நூறு மடங்கு குறைந்துள்ளது. இதனால் சூரியனிலிருந்து வரும் கொடிய கதிர்வீச்சுகள் நேரடியாகப் பட்டதால் செவ்வாய் இன்று உயிரில்லா வெறுமையான கிரகமாகவே காட்சியளிக்கிறது.

ஆனாலும், கடந்த காலத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்கலாம் என்ற சாத்தியக்கூறுகளை ஆராயும் முயற்சி இடையறாது நடைபெற்று வருகிறது.இதில்கடந்த 2020 ஜூலை 30ஆம் தேதி நாசா, பெர்சவரன்ஸ் என்ற அதிநவீன விண்கலத்தை அனுப்பியது. கடந்த 2021 பிப்ரவரி 18ஆம் தேதி, அதிலிருந்த ரோவர் ஜெசேரோ பள்ளத்தாக்கு எனப்படும் பகுதிக்கு தரையிறங்கியது.

இப்பள்ளத்தாக்கு ஒருகாலத்தில் பெரிய ஆறு ஓடிய இடமாக விஞ்ஞானிகள் கருதினர். அதனால், உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடிய சான்றுகளைத் தேடும் பொருட்டு இந்த இடமே தேர்ந்தெடுக்கப்பட்டது.இந்நிலையில், பெர்சவரன்ஸ் ரோவர் தற்போது சேகரித்த பாறை மாதிரிகள், கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அங்கு ஓடிய ஒரு பெரும் ஆற்றின் அடிப்பகுதியிலிருந்தவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதிரிகளை ஆய்வு செய்ததில், நுண்ணுயிர்கள் வாழ்ந்ததற்கான மிக முக்கியமான ரசாயனக் கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாசாவின் பொறுப்பு நிர்வாகி ஷான் டப்பி,“அதிபர் டிரம்ப்பின் முதல் ஆட்சிக் காலத்தில் அனுப்பப்பட்ட பெர்சவரன்ஸ் விண்கலம், செவ்வாய் ஆய்வில் புரட்சிகர முன்னேற்றத்தை நிகழ்த்தியுள்ளது.

நாங்கள் பெற்றுள்ள பாறை மாதிரிகள், செவ்வாய் கிரகத்தில் நுண்ணுயிர்கள் வாழ்ந்ததற்கான மறுக்க முடியாத ஆதாரத்தை வழங்குகின்றன. இது மனிதனின் செவ்வாய் குறித்த புரிதலை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்கிறது” என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

secret buried Martian rock Revolutionary evidence discovered by NASA


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->