வெறும் ரூ.6999... அசத்தலான அம்சங்களுடன்.. பட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்சி எம் 07!
Samsung galaxy m 07
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் தனது புதிய பட்ஜெட் மாடலான கேலக்சி எம்07-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
தென்கொரிய நிறுவனமான சாம்சங், உலகம் முழுவதும் மின்னணு சாதன உற்பத்தியில் முன்னணி வகிக்கிறது. குறிப்பாக அதன் ‘எம்’ சீரிஸ் போன்கள் மலிவு விலையில் சிறந்த அம்சங்களைக் கொண்டதால் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
அந்த வரிசையில் அறிமுகமாகியுள்ள கேலக்சி எம்07, 6.7 இன்ச் ஹெச்டி+ எல்சிடி டிஸ்பிளே கொண்டது. மீடியாடெக் ஹீலியோ ஜி99 ப்ராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்துடன் இயங்குகிறது. புகைப்பட வசதிக்காக 50 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இதில் 4ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. 5,000mAh திறன் கொண்ட பேட்டரி, 25 வாட்ஸ் வேக சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற அம்சங்களும் உள்ளன.
இந்த கேலக்சி எம்07 மாடலின் விலை ரூ.6,999 என அறிவிக்கப்பட்டுள்ளது. மலிவு விலையிலும், நவீன அம்சங்களுடனும் வந்துள்ளதால், இந்த போன் இந்திய வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.