தசரா கொண்டாட்டங்ககளை பயன்படுத்தி சிறையில் இருந்து தப்பியோடிய கொலை குற்றவாளி கைதிகள்..! - Seithipunal
Seithipunal


நேற்று நாடுமுழுவதும் தசரா கொண்டாட்டங்கள் நடைபெற்றது. அப்போது, இதனை பயன்படுத்திக்கொண்டு, ஒடிசா கட்டாக் மாவட்டத்தில் உள்ள சவுத்வார் சிறையில் இருந்து 02 கொடூர கைதிகள் தப்பி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் பீகாரை சேர்ந்த ராஜா சஹானி மற்றும் சந்திரகாந்த் குமார் என தெரியவந்துள்ளது. இருவரும் கடந்த ஜனவரியில் ஜஜ்பூர் மாவட்டத்திற்குட்பட்ட நகை கடை ஒன்றில் புகுந்து கொள்ளையடித்து சென்றனர். அப்போது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் கடையில் இருந்த 2 பேர் பலியாகியுள்ளனர். இந்த வழக்கில் கடந்த ஜனவரி 04-ந்தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள்.

இந்நிலையில், இன்று அதிகாலை சிறையில் வார்டன்கள் யாரும் பணியில் இல்லாததை அறிந்த அந்த 02 கைதிகளும், சிறை அறையின் கதவை உடைத்து வெளியேறியதோடு, சுவர் ஏறி குதித்து தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் பற்றி, தகவல் கிடைத்து, ஒடிசா சிறை துறை இயக்குநர் ஜெனரல் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனடியாக சிறைக்கு சென்றுள்ளனர்.

தற்போது, உள்மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் இந்த சிறையில், சிகிச்சையின்போது, விசாரணை கைதிகள் தப்பியோடிய சம்பவங்கள் நடந்துள்ளன. சிலர் சிறைக்குள்ளேயே தற்கொலை செய்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Murder convicts escape from prison using Dussehra celebrations


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->