வானில் அரிய காட்சி! பூமிக்கு நெருங்கும் வியாழன் கோள்... இன்று வெறும் கண்களால் காணலாம்...! - நாசா - Seithipunal
Seithipunal


நமது சூரியக்குடும்பத்தில் ஐந்தாவது கோளாக விளங்கும் வியாழன், அளவில் சூரியக்குடும்பத்திலேயே மிகப்பெரிய கோள் என்ற பெருமையை பெற்றுள்ளது. பூமியை அளவுக்கோலாக எடுத்தால், சுமார் 1,300 பூமிகளை ஒரே நேரத்தில் வியாழன் கோளுக்குள் அடக்க முடியும் என்றால், அதன் பிரம்மாண்டத்தை எளிதில் உணரலாம்.

இந்த மகத்தான கோளை 75-க்கும் மேற்பட்ட துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். பூமி–வியாழன் இடையேயான சராசரி தொலைவு சுமார் 63.3 கோடி கிலோ மீட்டர் ஆகும்.இந்த நிலையில், அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வியாழன் கோளின் இயக்கத்தை ஆய்வு செய்து வந்த நிலையில், வியாழன் தற்போது பூமிக்கு நெருங்கி வருவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கையில்,“வியாழன் கோள் பூமியை நோக்கி அருகில் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு, வியாழனை வெறும் கண்களாலேயே காண முடியும்.

சூரியன் மறைந்த பிறகு, கிழக்கு திசையில் ஜெமினி விண்மீன் கூட்டத்திற்கு அருகில் இந்த பிரகாசமான கோளை பார்க்கலாம்.

மேலும் நாளை (சனிக்கிழமை) சூரியன், பூமி மற்றும் வியாழன் ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்து அரிய வானியல் நிகழ்வை உருவாக்கும்” என தெரிவித்துள்ளனர்.

வானத்தை நோக்கி பாருங்கள்… இன்று இரவு வியாழன் தனது பிரம்மாண்ட ஒளியால் உங்களை ஆச்சரியப்படுத்த காத்திருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

rare sight sky Jupiter approaching Earth Visible naked eye today NASA


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->