விண்வெளி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..!
Planets details In tamil
விண்வெளி என்றால் என்ன?
விண்வெளி என்பது பிரபஞ்சத்தின் பொருட்கள் எல்லாம் நகர்ந்து செல்லக்கூடிய, கிட்டதட்ட ஒரு வெற்றிடம் ஆகும். இவ்வாறு நகர்ந்து செல்லும் பொருட்களில் நமது பூமியும் அடங்கும்.
இந்த பரந்த விண்வெளியில் நட்சத்திரங்களும், கிரகங்களும், பூமியும் மிக மிக சிறிய புள்ளிகளே.
விண்வெளி என்பது ஒப்பீட்டளவில் கோள்களின் காற்று மண்டலத்துக்கு வெளியேயுள்ள, பிரபஞ்சத்தின் வெறுமையான பகுதியாகும். இது பூமியின் மேற்பரப்பிலிருந்து கிட்டத்தட்ட 100 கிலோமீட்டருக்கு மேலே ஆரம்பமாவதாக கொள்ளலாம்.
விண்வெளி பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் :
விண்வெளி என்பது மில்லியன் கணக்கான தூரத்தில் உள்ளது என்று எல்லோரும் நினைத்துக் கொண்டு இருப்பீர்கள். ஆனால் அது உண்மையில்லை.
அதேபோல் விண்வெளி செல்வதற்கு மாதக்கணக்கில் ஆகும் என்று நினைத்து கொண்டு இருப்பீர்கள். இல்லை 3 முதல் 5 நிமிடங்களில் விண்வெளி சென்று விடலாம்.
விண்வெளி செல்பவர்கள் மாத்திரையை தான் உணவாக சாப்பிடுவார்கள் என்று நினைத்தால் அது தவறு. அவர்களுக்கு என்று உணவு பர்கர், பீட்ஸா பிறவற்றை சமையல் செய்து தர தனி ஆட்கள் உள்ளனர்.
விண்வெளியில் காற்று இல்லாத காரணத்தால் நீங்கள் பேசுவதை கேட்க முடியாது.
விண்வெளியில் உணர்ச்சிகளை மறைப்பது மிகவும் எளிதானது. ஏனென்றால் ஈர்ப்பு இல்லாததால், அங்கு அழுவது உடல் ரீதியாக சாத்தியமற்றது.
விண்வெளியில் உள்ளடக்கியவை :
கருந்துளை : கருந்துளை என்பது விண்வெளியின் எல்லைக்குட்பட்ட தொலைவில் செல்லும், ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்பு சக்தியைக் கொண்டுள்ள அண்டவெளியின் ஒரு பகுதியாகும்.
நட்சத்திரம் : விண்மீன் அல்லது நட்சத்திரம் (star) என்பது விண்வெளியில் காணப்படும் ஒரு பெரிய ஒளிரும் கோளமாகும்.
கோள் : கோள் (planet) என்பது விண்மீனைச் சுற்றி வரும் வான்பொருளாகும்.
பால்வெளி : பால்வெளி என்பது நம் சூரிய மண்டலத்தை உள்ளடக்கிய ஒரு விண்மீன் பேரடை ஆகும். பால்வெளி எனும் சொல் இலத்தீன் மொழிச்சொல்லான எயை டயஉவநய என்பதன் மொழிப்பெயர்ப்பு ஆகும்.
சூரிய குடும்பம் : சூரியனையும், அதனைச் சுற்றியுள்ள கோள்களையும் சூரியக் குடும்பம் என அழைக்கின்றனர். சூரியக் குடும்பத்தில் எட்டு கோள்கள் உள்ளன. இந்த எட்டு பெரிய கோள்களும், புளூட்டோ உள்பட சிறிய கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன.