ஜிபிஎஸ் கருவியுடன் கல்லட்டி பகுதியில் சுற்றித்திரிந்த மர்மமான பிணம் தின்னி கழுகு; பொதுமக்களுக்கு வனத்துறையினர் முக்கிய அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து மசினகுடி செல்லும் மலைப்பாதையில் உள்ள கல்லட்டி பகுதியில் உள்ள அண்ணா நகர் குடியிருப்பு பகுதிக்கு ஒரு வித்தியாசமான கழுகு போன்ற பறவை பறந்து வந்து அமர்ந்துள்ளது. 

இதனை வியப்புடன் பார்த்த குடியிருப்பு வாசிகள், இந்த கழுகு வனப் பகுதிக்குள் பறந்து சென்றுவிடும் என்று எண்ணிய நிலையில் அந்த கழுகு வனப்பகுதிக்குள் பறந்து செல்லாமல் குடியிருப்பு பகுதியிலே தங்கியுள்ளது.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் தங்கி இருந்த இந்த கழுகு ஓரு கட்டத்தில் வானுயர்ந்த பறந்து மீண்டும் குடியிருப்பு பகுதிக்கே மீண்டும் வந்து அமர்ந்துள்ளது. அப்போது அதன் முதுகில் ஜிபிஎஸ் கருவியும் கால்களில் எண் குறியிடப்பட்ட ஒரு அடையாளமும் இருந்ததை கண்ட அப்பகுதி மக்கள் தங்களை கண்காணிக்க வந்துள்ளதா எண்ணி, வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த உதகை வனத்துறையினர் இது பிணந்தின்னிக்கழுகு என்றும் அதன் முதுகில் GPS கருவி பொத்தியணையும் உறுதி செய்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

விசாரணை இறுதியில் இது BNHS என்று அழைக்கப்படும் பாம்பே நேச்சுரல் இஸ்ட்ரி சொசைட்டி ஆராய்ச்சி நிறுவனம் இந்தக் கழுகை மும்பையில் வைத்து வளர்த்து பின்னர் ஆராய்ச்சிக்காக பறக்க விட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த கழுகு ஏற்கனவே முதுமலையில் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் சுற்றித்திரிந்து எப்பநாடு கிராமத்திற்கு வந்ததும் தற்போது அண்ணா நகரில் இருப்பதால் அதனை வனத்துறையினர் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.  இந்த ஜிபிஎஸ் கருவியுடன் தங்களது குடியிருப்பு பகுதியில் தங்கியுள்ள பிணம் தின்னி கழுகை பத்திரமாக மீட்டு அடர்ந்த வன பகுதிக்குள் விட வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே அண்ணா நகரில் சாலை ஓரத்தில் இருந்த டீ கடையின் அருகே வந்து அமர்ந்த அந்த பிணம் தின்னி கழுகின் அருகே கிராம மக்கள் சென்று புகைப்படம் எடுத்து ரசித்துள்ளனர்.  ஆனால், அந்த கழுகிற்கு தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறையினர் கிராம மக்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி கண்காணித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mysterious Eagle Roaming the Kallatti Area Equipped with a GPS Device


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->