திருப்பதி லட்டு நெய் கலப்பட வழக்கு; திண்டுக்கல் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை..!
Enforcement Directorate Conducts Raids at Dindigul Firm in Tirupati Laddu Ghee Adulteration Case
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கலப்பட நெய் ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில், அமலாக்கத்துறை நாடு முழுவதும் தொடர்ச்சியான சோதனைகளை நடத்தியுள்ளது.
கடந்த ஜூன் 03, 2026 அன்று, ஹைதராபாத் மண்டல அலுவலகத்தைச் சேர்ந்த அமலாக்க இயக்குநரக அதிகாரிகள், பல மாநிலங்களில் உள்ள 15 இடங்களில் ஒரே நேரத்தில் இந்தச் சோதனைகளை நடத்தினர்.
அதன்படி, திருமலை ஸ்ரீவாரி லட்டு பிரசாதம் தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டவரின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனை மேற் கொள்ளப்பட்டது.
இந்தச் சோதனை குறித்து அமலாக்கத்துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பின்படி தெரிவித்துள்ளதாவது;

''குண்டூர், டெல்லி, மும்பை, பிகானேர், டேராடூன், ரூர்க்கி, அகில்யநகர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன், கலப்பட நெய் விநியோக வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களான பொமில் ஜெயின், விபின் ஜெயின், ராஜு ராஜசேகரன், ராஜேஷ் மன்சுக்லால் சாவ்தா, அபூர்வ வினயகாந்த் சாவ்தா, மசிந்திர சாந்தாராம் லங்கா, அஜய் குமார் சுகந்த், மகேஷ் குமார் ரோஹிரா மற்றும் ஆஷிஷ் அகர்வால் ஆகியோரின் இல்லங்கள் மற்றும் அலுவலக வளாகங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தியதாகா கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த சோதனைகளின் போது, அமலாக்கத்துறை அதிகாரிகள் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான சட்டவிரோதப் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளதாகவும், மேலும், கலப்பட நெய் விநியோகம் மூலம் குற்றத்தின் வாயிலாக ஈட்டப்பட்ட பணம், 45 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் இருந்த சில சொத்துப் பத்திரங்களையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Enforcement Directorate Conducts Raids at Dindigul Firm in Tirupati Laddu Ghee Adulteration Case