புதிய கோள் கண்டுபிடிப்பு.. சூரியனை விட பெரியதாம்.! அசத்திய பள்ளி மாணவன்.! - Seithipunal
Seithipunal


சூரிய குடும்பத்திற்கு வெளியே, பூமியிலிருந்து ஆயிரத்து 300 ஒளிஆண்டுகள் தூரத்தில் இருக்கும் கோள் ஒன்றை நாசாவின் டெஸ் செயற்கைக் கோள் கண்டு பிடித்துள்ளது.

பிக்டர் என்ற நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள இந்த கோளானது சனி கிரகத்திற்கு இணையான அளவில் உள்ளது. இந்த கோள் 2 நட்சத்திரங்களை சுற்றி வருவதாகவும், அதில் ஒன்று சூரியனை விட 15 சதவிகிதம் பெரியது என நாசா தெரிவித்துள்ளது.

இந்த கோளை கண்டுபிடிப்பதில் நாசா மையத்திற்கு பயிற்சி பெற சென்ற ஊல்ஃப் குகியர் என்ற பள்ளி மாணவன் முக்கிய பங்கு வகித்துள்ளான்.

கோடிக்கணக்கான கேலக்சிகளில் நிறைந்துள்ள நடசத்திரக் கூட்டத்தின் வெளிச்சத்தில் ஏற்படும் ஏற்ற மற்றும் இறக்கங்களை வைத்து அங்கு கோள்கள் உள்ளனவா என்பதை நாசாவின் டெஸ் செயற்கைக் கோள் கண்டுபிடிப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new galaxy found in space


கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
Seithipunal