காங்கிரஸின் அதிரடி டிமாண்ட்.. திமுக-வின் 'டைட்' கணக்கு.. தொடரும் இழுபறி!
DMK Congress Seat Sharing Deadlock 39 Demanded 22 Offered
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை எதிர்பாராத திருப்பங்களுடன் தொடங்கியுள்ளது.
நேருக்கு நேர் மோதும் குழுக்கள்:
திமுக தரப்பு: பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட வலுவான குழு.
காங்கிரஸ் தரப்பு: தமிழக மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழு.
முக்கிய முரண்பாடு:
இரு தரப்பும் தங்களது எண்ணிக்கையில் பிடிவாதமாக இருப்பதால், முதற்கட்டப் பேச்சுவார்த்தையிலேயே 'இழுபறி' நீடிக்கிறது:
காங்கிரஸின் அதிரடி டிமாண்ட்: தங்களுக்கு 39 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடம் பிடிவாதம் காட்டுகிறது.
திமுக-வின் 'டைட்' கணக்கு: புதிய கூட்டணிக் கட்சிகளின் வருகையைக் காரணம் காட்டி, காங்கிரஸுக்கு 22 இடங்கள் மட்டுமே தர முடியும் (கடந்த தேர்தலைவிட 3 சீட்டுகள் குறைவாக) என திமுக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அரசியல் பின்னணி:
கடந்த தேர்தல்களை விடக் கூடுதல் இடங்களை பெறுவதன் மூலம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறக் காங்கிரஸ் துடிக்கிறது. ஆனால், கூட்டணிக் கட்சிகளைச் சமாளிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கும் திமுக, காங்கிரஸைக் கட்டுப்படுத்த முயல்கிறது. இந்த மோதல் அடுத்தடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகளில் எப்படி மாறப்போகிறது என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக்.
English Summary
DMK Congress Seat Sharing Deadlock 39 Demanded 22 Offered