மெட்டாவில் பரபரப்பு! AI வளர்ச்சி...மனித இழப்பு...! -600 ஊழியர்கள் வெளியே...! - Seithipunal
Seithipunal


தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதே வேகத்தில் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் குறைந்து கொண்டிருப்பதும் கவலைக்குரிய விடயம்.

குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி பல நிறுவனங்களின் “மறுசீரமைப்பு” எனும் பெயரில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வீதிக்கு தள்ளி வருகிறது.இந்த நிலையில், சமூக வலைதள மாபெரும் நிறுவனம் மெட்டா (Meta), தனது AI பிரிவில் பணிபுரியும் சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

இதனை அந்நிறுவனத்தின் AI உள்கட்டமைப்பு பிரிவு தலைமை அதிகாரி அலெக்சாண்டர் வாங் உறுதிப்படுத்தியுள்ளார்.இந்த பணிநீக்கம் AI Infrastructure Units, FAIR (Fundamental Artificial Intelligence Research) பிரிவு மற்றும் பிற தயாரிப்பு சார்ந்த துறைகளில் பணிபுரியும் ஊழியர்களை அதிகமாக பாதிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதில் சுவாரஸ்யமாக, இதே மெட்டா நிறுவனம் இவ்வருடத்தின் தொடக்கத்தில் புதியதாக 50 பேரை AI பிரிவில் பணிக்கு நியமித்திருந்தது. ஆனால், ஆண்டுகள் காலமாக பணியாற்றி வந்த அனுபவமிக்க ஊழியர்களை தற்போது வெளியேற்றுவது, “AI வளர்ச்சி -மனித இழப்பு” என்ற கடுமையான விவாதத்தை மீண்டும் தலைதூக்க வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Meta state upheaval AI development human loss 600 employees out


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->