கால்களில் செருப்பு கூட இல்லாமல், வேட்டி சட்டையுடன் பி.இ படித்த சிவன்..!! - Seithipunal
Seithipunal


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO - வின் கனவு திட்டங்களில் ஒன்றான சந்திராயன் 2 திட்டத்தினை வெற்றியடைய செய்வதற்கு., சந்திராயன் 2 விண்கலத்தினை ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட்டின் மூலமாக கடந்த ஜூலை மாதத்தின் 22 ஆம் தேதி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் பூமியின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதை அடுத்து., நிலவை நோக்கிய தனது பயணத்தை துவங்கி., நிலவின் சுற்றுவட்ட பாதையினை அடைந்தது. பின்னர் நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு சென்று., சந்திராயன் விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் பிரிக்கப்பட்டு., நிலவின் மீது பத்திரமாக தரையிறக்கும் முயற்சிகள் நடைபெற்று வந்தது.

இந்த செய்தி குறித்த முழு வீடியோ பதிவு; 

இந்த சமயத்தில்., எதிர்பாராத விதமாக விக்ரம் லெண்டரின் சிக்னல் துண்டிக்கப்படவே., இதனையடுத்து சோகத்தில் இருந்த ஆராய்ச்சியாளர்கள்., ஆர்பிட்டரின் உதவியுடன் விக்ரம் லேண்டர் இருப்பிடம் கண்டறிப்படும் என்று தெரிவித்திருந்தனர். இந்த தருணத்தில்., நேற்று விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டறியப்பட்ட நிலையில்., ஆர்பிட்டரை விக்ரம் லேண்டருக்கு அருகில் கொண்டு செல்லும் முயற்சிகள் தொடர்ந்து வருகிறது. இந்த இமாலய வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு உலகம் முழுவதிலிருந்தும் தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த வெற்றியில் இஸ்ரோவின் தலைவரான தமிழகத்தை சார்ந்த சிவனின் பெருமையும் உலகெங்கும் தெரியவந்துள்ளது. தமிழகத்தை சார்ந்த இஸ்ரோ தலைவரான சிவனின் பெயரை உலக நாடுகள் உச்சரித்து இந்தியாவிற்கும் - தமிழகத்திற்கு கிடைத்த பெருமையாகும்.

sivan, isro sivan, isro chief sivan,

விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்த சமயத்தில்., உலக நாடுகளில் இருந்து அனைவரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்த நிலையில்., இதற்கு முக்கிய பங்காற்றிய ஆராய்ச்சியாளர்களும் - சிவனும் பெரும் சோகத்தில் ஆழ்ந்த சமயத்தில்., இந்தியாவின் பிரதமர் கட்டித்தழுவி ஆறுதல் கூறியது பெரும் வரவேற்பை பெற்றது. இந்த தருணத்தில்., தமிழகத்தை சார்ந்த சிவனின் வாழ்க்கை குறித்து நாம் அறிவதும் அவசியம். தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலசரக்கல்விளை கிராமத்தில் 1957 ஆம் வருடத்தில் சிவன் பிறந்தார். அங்குள்ள மேலசரக்கல்விளை பகுதியில் உள்ள கிராம அரசு பள்ளியில் பயின்றார். இவரது தந்தைக்கு சொந்தமாக மாந்தோப்பு இருந்த நிலையில்., தந்தைக்கு உதவியாக விடுமுறை தினங்களில் மாந்தோப்பில் இருக்கும் பணிகளை கவனித்து வந்துள்ளார். 

modi with sivan, isro sivan cry modi calm sivan,

பள்ளி படிப்போடு தனது படிப்பினை நிறுத்த கூடாது மற்றும் தந்தைக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று எண்ணி., நாகர்கோவில் இந்து கல்லூரியில் சேர்ந்து பயின்றுள்ளார். இதற்கு பின்னர் பி.இ படிக்க ஆசைப்பட்ட சிவன் தனது விருப்பத்தை தந்தையிடம் கூறவே., இதனை கேட்ட சிவனின் தந்தை அவ்வுளவு பெரிய படிப்பிற்கு என்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனை கேட்டு ஆத்திரம் அடைந்த சிவன்., படிப்பின் மீது உள்ள நாட்டத்தால் வாரம் முழுவதும் பட்டினி இருந்து தந்தையிடம் காரியத்தை சாதுர்யமாக சாதித்துள்ளார். மகனின் படிப்பாசையை கண்ட தந்தையும் பி.இ படிக்க வைத்துள்ளார். பி.இ படித்த சமயத்தில் கால்களில் செருப்பு கூட இல்லாமல்., வேட்டி சட்டையுடன் படிப்பினை நிறைவு செய்தார். 

sivan family members, sivan, isro sivan, isro sivan with family,

பின்னர் மகனின் ஆசையே தனது ஆசை என்று கூறி., மகனுக்கு இன்ப அதிர்ச்சி செய்யும் வகையில் மாந்தோப்பை விற்பனை செய்து சென்னையில் உள்ள தொழில் நுட்ப கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். பின்னர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருக்கும் ஐ.ஐ.எஸ் இயல் ஏரோபேஸ் பொறியியல் படிப்பினை நிறைவு செய்து., 1982 ஆம் வருடத்தில் இஸ்ரோவின் ராக்கெட் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு பிரிவில் பணியை துவங்கினார். மும்பை ஐ.ஐ.டியில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இந்த வெற்றிகளுக்கு பிறகு கடுமையான உழைப்பின் காரணமாக விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனராகவும்., கடந்த வருடத்தில் இஸ்ரோவின் தலைவராகவும் ஆனார்.. விக்ரம் லேண்டரின் இறுதிக்கட்ட முயற்சி தோல்வியில் முடிந்திருந்தாலும்., பல உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த பெருமையுடன் நாங்கள் கூறுவோம்., எங்கள் நாட்டிற்கு தேவையான உதவியை செய்ய எங்களால் இயலும் என்று....இந்தியர்களின் இதயத்தில் நீங்கள் நீங்காத இடத்தினை பெற்றுள்ளீர்கள்.. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

isro sivan history


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal