இஸ்ரோவில் இருந்து இப்படி ஒரு அறிவிப்பா வெளியாக வேண்டும்? இஸ்ரோவின் நியூ அப்டேட்! - Seithipunal
Seithipunal


சந்திரயான்-2 விண்ணுக்கு அனுப்பப்பட்டதிலிருந்து இந்தியாவில் அதிகம் பேசப்படும் ஒரு பொருளாக மாறி போனது இஸ்ரோ. விஞ்ஞானிகள் இந்தியாவிற்காக இவ்வளவு நாட்கள் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தாலும், தற்போது சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகமாகி விட்டதால் அதில் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறார்கள். அவர்களின் உழைப்பு அங்கீகரிக்கப்படுகிறது, மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தப்படுகிறது என்பது  மகிழ்ச்சியான செய்திதான். ஒருவருக்கொருவர் அவர்களுக்கு வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதும் வரவேற்க வேண்டிய ஒன்றுதான். 

சந்திரயான் - 2 95 சதவீதம் வெற்றிகரமாக செயல்படுத்தி முடிந்தாலும், லேண்டர் விக்ரம் சரியாக தரை இறங்காத காரணத்தினால் அனைவரும் சோகத்தில் இருந்தார்கள். இதனையடுத்து சந்திராயன் 2 மூலம் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் லேண்டர் விக்ரம் இருப்பிடத்தை கண்டுபிடித்தது  என்ற மகிழ்ச்சியான செய்தியை இஸ்ரோ வெளியிட்டது. அதனையடுத்து அடுத்த அப்டேட் எப்போது வரும் என அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்று இஸ்ரோ இணையதளத்திலும் சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு செய்தியானது வெளியானது. 

அதை பார்க்கும் பொழுது, இஸ்ரோ இப்படி ஒரு அப்டேட் பண்ண வேண்டிய சூழல் உருவாகிடுச்சே என்ற ஆதங்கம் தான் அனைவருக்கும் வரும். அந்த அப்டேட்டில் என்ன இருந்திருக்கும் என கேட்கிறீர்கள் தானே!  அந்த பதிவில் இஸ்ரோ சேர்மன் சிவன் அவர்களின் புகைப்படத்துடன் சமூக வலைதள பக்கம் செயல்பட்டில் உள்ளது. ஆனால் அவர்களுக்கு என தனியாக யூடியூப் , ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரிலும் எவ்வித சமூக வலைத்தள கணக்குகளும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இஸ்ரோவின் அதிகாரபூர்வ பக்கங்களில் தான் தகவல்கள் வரும் என அவர்களின் இணையதள பக்கங்களை வெளியிட்டுள்ளார்கள். 

https://www.twitter.com/isro
https://www.facebook.com/ISRO
Youtube ISRO Official

பொதுவாக சமூக வலைதள பயன்பாட்டை பொறுத்தவரையில், சில விளம்பர பிரியர்கள் அப்பொழுது அதிகமாக எந்த விஷயம் பேசப்படுகிறதோ, அந்த விஷயத்தில் தொடர்புடைய நபரின் பெயரில் போலியான கணக்குகளை உருவாக்கி, அதில் கிடைக்கும் வரவேற்புக்கு மயங்கி, தொடர்ந்து பிரபலங்களின் பெயரில்  சமூக வலைதளத்தினை பயன்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. இதில் அந்த கணக்கினை நல்லவிதமாக பயன்படுத்தும் வரையில் எவ்வித பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை. ஏதேனும் ஒரு சிறிய தவறான விஷயமானாலும் அது மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கி விடுகிறது. அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராயாமல் சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் வேகம் வேகமாக பகிர்ந்து விடுகிறார்கள். 

அதுபோல எந்த வித தவறான கருத்துக்களும் தங்களின் பெயர்களில் இருந்து வெளியேறி விடக்கூடாது என்பதற்காக, முன்கூட்டியே எச்சரிக்கையாக சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களின் செயல்பாடுகளை முன்கூட்டியே அறிந்திருந்தார்களோ என்னவோ, இவ்வாறான முன் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது இஸ்ரோ. 

பொதுவாக விஞ்ஞானிகள் என்பவர்கள் சுதந்திரமாக சிந்தித்து செயல்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு எவ்வித நெருக்கடியும் கொடுக்காத வண்ணம் செயல்பட வேண்டியது பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் கடமை ஆகும். ஆனால் சந்திராயன்-2 அதிகப்படியான பேசும் பொருளாக இருப்பதால், அவர்களுக்கு, ஏதேனும் அழுத்தங்கள்  உருவாக கூட வாய்ப்புகள் இருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்கால சந்ததியினரின் தேவைகளுக்காகவும் உழைத்து கொண்டிருக்கும் விஞ்ஞானிகளை வாழ்த்துவதோடு நம் சமூக வலைத்தள பயன்பாட்டை நிறுத்தி கொள்வது சாலச் சிறந்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

isro new update about social media accounts


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->