அதிரடி விலையில் Gemini AI போன்! இப்போது வெறும் ₹54,999! வங்கி ஆஃபர்கள் கூட!இந்த ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு 7 வருஷம் OS அப்டேட்! - Seithipunal
Seithipunal


ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஃபிளிப்கார்ட் ‘விண்டர் பொனான்சா’ விற்பனையில் பெரிய அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுளின் பிரீமியம் ஃபிளாக்ஷிப் மாடலான Google Pixel 9—க்கு நேர்கொண்ட ₹25,000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதால், இந்த ஸ்மார்ட்போனை இப்போது ₹54,999 என்ற குறைந்த விலையில் வாங்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. முதலில் ₹79,999க்கு விற்பனைக்கு வந்த இந்த மாடல், தற்போது மிகப்பெரிய விலை குறைவுடன் கிடைப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இதற்கு கூடுதலாக சில வங்கி அட்டைகளில் 5% கேஷ்பேக் சலுகையும் பொருந்தும். பழைய ஸ்மார்ட்போனை பரிமாற்றம் செய்யும் (Exchange) வசதி மூலம் விலையை இன்னும் குறைக்கவும் முடியும்.

பிரீமியம் தரத்தை இழக்காமல், அதிக தள்ளுபடியில் கிடைக்கக்கூடிய பிக்ஸல் 9 இன் முக்கிய அம்சங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. 6.3 இன்ச் OLED டிஸ்ப்ளே, 120Hz ரிஃப்ரெஷ் ரேட், 2700 நிட்ஸ் பிரகாசம் போன்ற வசதிகள் உள்ளன. கூகுலின் சக்திவாய்ந்த Tensor G4 செயலியுடன், 12GB RAM மற்றும் 256GB சேமிப்பகமும் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 செயலியில் அறிமுகமான இந்த சாதனத்திற்கு, கூகுள் 7 ஆண்டுகள் வரை OS அப்டேட்கள் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

பின்னால் 50MP பிரதான லென்ஸ் மற்றும் 48MP அல்ட்ரா-வைட் லென்ஸ் கொண்ட டூயல் கேமரா அமைப்பு, முன்புறத்தில் 10.5MP செல்ஃபி கேமரா ஆகியவை புகைப்படக் கலைஞர்களை கவரும் அம்சங்கள். 4700mAh பேட்டரி, 27W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் மேம்படுத்தப்பட்ட Google Gemini AI வசதிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

பிரீமியம் ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கு, இத்தனை பெரிய தள்ளுபடியில் Pixel 9-ஐ பெற இந்த விற்பனை சிறந்த சந்தர்ப்பமாக அமிந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gemini AI phone at a great price! Now just 54999 Bank offers too 7 years of OS updates for those who buy this smartphone


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




சினிமா

Seithipunal
--> -->