வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிஎஸ்என்எல் நிறுவனம்.!  - Seithipunal
Seithipunal


நாட்டில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் 5ஜி சேவைக்கு வந்துவிட்டன. ஆனால், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தற்போது தான் 4ஜி சேவைக்கு நகர்ந்திருக்கிறது. அதே சமயம், சிறிய இடைவேளையில் 5ஜி சேவையும் வழங்கவிருப்பதாக பிஎஸ்என்எல் உத்திரவாதம் தந்துள்ளது.

தனியார் நிறுவனத்தின் ஆதிக்கம் காரணமாக, பிஎஸ்என்எல் பின்தங்கிப்போனது. அந்த நிறுவனத்துக்கு ஆதரவளிக்காது அரசுகளும் புறக்கணிக்க ஆரம்பித்தன. இதனால் ஏர்டெல், ஜியோ, வோடோபோன் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தின. 

இதனால், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு புத்துயிர் தரும் விதமாக, 4ஜி மற்றும் 5ஜி சேவைகள் அடுத்தடுத்து அறிமுகமாகும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பிஎஸ்என்எல் நிறுவனம் டிசம்பரில் 4ஜி சேவையை அறிமுகம் செய்கிறது. இந்த சேவை வருகிற 2024 ஆம் ஆண்டு ஜூன் முதல் வாடிக்கையாளர் அனைவருக்குமான சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, அடுத்த சில மாதங்கள் இடைவெளியில் 5ஜி சேவையும் அறிமுகமாகும் என்று தெரிவித்துள்ளது. தற்போதைக்கு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்களது 2ஜி மற்றும் 3ஜி சிம்களை, 4ஜி சிம் வசதிக்கு இலவசமாக மேம்படுத்திக்கொள்ளலாம். இது தொடர்பான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bsnal company announce 4g network service


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->