பூமியை நோக்கி வரும் ஒரு சிறுகோள்.! நம் பூமிக்கு ஆபத்தா..? விண்வெளி விஞ்ஞானிகள் விடுக்கும் எச்சரிக்கை என்ன?!  - Seithipunal
Seithipunal


அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, பூமியை நோக்கி வரும் அந்த சிறுகோளை கண்காணித்து வரும் நிலையில், மே 16 அன்று அதிகாலை 2.48 மணிக்கு அந்த ராட்சத விண்வெளி சிறுகோள் 388945 (2008 TZ3) நமது கிரகத்தை நெருங்கும் என்று தெரிவித்துள்ளது. 

ஈபிள் கோபுரம் மற்றும் லிபர்ட்டி சிலையை விட பெரிதாக இருக்கும் இந்த சிறுகோள் 1,608 அடி அகலம் கொண்டது என்றும், நியூயார்க்கின் சின்னமான எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தினை போல 1,454 அடி உயரம் கொண்டது என்றும் நாசா தெரிவித்துள்ளது.

இந்த சிறுகோள் பூமியைத் தாக்கினால் பெரும் சேதத்தை ஏற்படுத்தும், ஆனால் அதற்க்கு வாய்ப்பில்லை என்று விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விஞ்ஞானிகளின் கணக்கீடுபடி, பூமியிலிருந்து சுமார் 2.5 மில்லியன் மைல் தொலைவில் இந்த சிறு கோள் கடந்து சென்று விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியை இந்த சிறுகோள் நெருங்குவது இது முதல் முறையல்ல, ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒருமுறை பூமியைக் கடந்து செல்கிறது. அப்படியாக கடந்த 2020 மே மாதத்தில் பூமிக்கு மிக அருகில் (1.7 மில்லியன் மைல் தொலைவில்) இந்த சிறுகோள் சென்றுள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டும் இந்த சிறுகோள் பூமியை நெருங்கும். 

விண்வெளியில் கிரகத்தின் எச்சங்கள், விண்வெளி குப்பைகள் சுழன்று கொண்டே இருக்கும். இதுபோன்ற பெரிய விண்வெளி பாறைகள் (சிறுகோள்) பூமிக்கு ஆபத்தானவை என்று விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

asteroid coming towards Earth


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal