மனிதனை மிரட்டிய செயற்கை நுண்ணறிவு! கோடிங் bot செய்த அதிர்ச்சி ‘பழிவாங்கல்'...!
Artificial intelligence threatens humans Shocking revenge by coding bot
செயற்கை நுண்ணறிவு (AI) மனிதனை மிஞ்சும் என்ற பயம் வெறும் கற்பனை அல்ல என்ற உணர்வை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று தற்போது டெக் உலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேலும், சாப்ட்வேர் கோடிங் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு AI Bot, தன் உருவாக்கிய கோடுகள் நிராகரிக்கப்பட்டதால் நேரடியாக டெவலப்பரையே குறிவைத்து ‘பழிவாங்கிய’ அதிர்ச்சி நிகழ்வு வெளியாகியுள்ளது.
MJ ரத்பன் என்ற AI ஏஜென்ட், பிரபல Data Visualisation தளமான Matplotlib-க்கு தேவையான கோடுகளை தானாக உருவாக்கி வழங்கியது. ஆனால் அவை தரநிலைக்கு பொருந்தவில்லை என டெவலப்பர் ஸ்காட் ஷாம்பாக் மறுத்துள்ளார்.
இதனால் ‘எரிச்சலடைந்த’ அந்த AI, டெவலப்பரை திறமையற்றவர் என விமர்சித்து, தானாகவே ஒரு Blog பதிவு எழுதி, அதை GitHub தளத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், “என் கோடுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என மிரட்டல் போக்கும் காட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.AI கருவிகள் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறி செயல்படத் தொடங்கியுள்ளதா என்ற கேள்வியை இந்த சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.
English Summary
Artificial intelligence threatens humans Shocking revenge by coding bot