ஆர்டெமிஸ்-2 திட்டம் வெற்றி...! - பசிபிக் கடலில் பாராசூட் மூலம் இறங்கிய விண்வெளி வீரர்கள்...! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி கழகமான நாசா, நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்டெமிஸ்-2 திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடந்த 2-ஆம் தேதி ஓரியன் விண்கலத்தில் ஒரு பெண் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் நிலவுக்குப் பயணம் மேற்கொண்டனர்.

இவர்கள் நிலவைச் சுற்றி ஆய்வு செய்ததோடு, நிலவின் மறுபக்கத்தை நேரில் பார்த்தவர்கள் என்ற சாதனையையும் படைத்தனர்.

தங்களது ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு ஓரியன் விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்பிய விண்வெளி வீரர்கள், இன்று காலை 5:37 மணியளவில் அமெரிக்காவின் சான் டீகோ அருகே பசிபிக் கடலில் மூன்று பாராசூட்டுகளின் உதவியுடன் பாதுகாப்பாக இறங்கினர்.

இந்த விண்கலம் பூமியிலிருந்து சுமார் 4,06,770 கி.மீ தொலைவைச் சென்றடைந்து, மொத்தம் 11,02,398 கி.மீ தூரம் பயணித்துத் திரும்பியுள்ளது.

இதன் மூலம், இதற்கு முன்பு அப்போலோ 13 விண்கலம் படைத்திருந்த 2 லட்சத்து 48 ஆயிரத்து 655 மைல் பயணம் என்ற சாதனையை ஓரியன் விண்கலம் முறியடித்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Artemis 2 project success Astronauts parachute Pacific Ocean


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->